இந்திய தேசியமும் இந்துத்துவகாட்டுமிராண்டிகளும்
* இந்திய தேசியம் என்பதே இந்துதேசியம் தான்
* பகவத் கீதையை தேசிய நூலாகஅறிவிக்க வேண்டும்.
* ராமர் பிறந்த இடத்தில் அவர்கோயிலை இடித்து கட்டப்பட்டது பாபர்மசூதி.
* துர்க்கையம்மன் கோயில் இருந்தஇடத்தில் கட்டப்பட்டது வேளாங்கண்ணிகோயில்.
* மாரியம்மன் கோயில் இருந்த இடத்தில்கட்டப்பட்டது புதுவை சம்பா கோவில்
* சிவன் கோயில் இருந்த இடத்தில்கட்டப்பட்டுள்ளது தாஜ்மகால்
* ராமர் கோயிலை கட்டியே தீருவோம்
* நீங்கள் ராமனின் பிள்ளைகளா?அப்பன் பெயர் தெரியாதவர்களா?
* சமஸ்கிருதம் கட்டாயமாக மத்திய அரசுபள்ளிகளில் கற்பிக்கப்படும்
* திருவள்ளுவர் இந்து தான்.
இன்னும் இப்படியான மதவெறியூட்டும்பேச்சுகளை அடுக்கிக்கொண்டேபோகலாம். இந்தியா மதச்சார்பற்றகுடியரசு என்று இந்திய அரசியல்சாசனம் வரையறுக்கிறது. ஆனால்மேலே உள்ள பேச்சுகளை பார்த்தால்உங்களூக்கு நியாயமாக சில கேள்விகள்தோன்றுமில்லையா? அவர்கள்அப்படித்தான் என கடந்துபோகஇவையொன்றும் பொழுதுபோக்குவிஷயமல்ல. ஒவ்வொரு குடிமகனின்வாழ்வோடும், ஏன் அவனின்/அவளின்உயிரோடும் தொடர்புடைய,அச்சுறுத்தல்கள்/சவால்கள். அந்தகேள்விகளுக்கு விடை தேடுவதுதான்இந்த பதிவின் நோக்கம்!
இங்கே இந்துக்கள் இல்லையா,கிறிஸ்தவர்கள் இல்லையா,வந்தேறிகளான தீங்கள் இந்த நாட்டில்சுதந்திரபாக வாழ்வதில்லையா என்றுஉங்களுக்கு கேட்கவும் தோன்றலாம்.தமிழ்தேசியத்தை ஆதரிக்காதவன் எப்படிதமிழ்நாட்டில் வந்தேறியோ , அப்படியேஇந்து தேசியத்தை ஆதரிக்காதவன்இந்தியாவில் வந்தேறி. இவ்வளவுதான்தமிழ்தேசியத்திற்கும் இந்துதேசியத்திற்கும் உள்ள ஒற்றுமையும்வேற்றுமையுமாக இருக்கிறது. நீங்கள்எப்போது தமிழ் தேசியத்தைஆதரிக்கிறீர்களோ அப்போது தமிழ்மண்ணின் பூர்வீகக் குடிமகனாகிவிடுவீர்கள். இது உங்களின் மூதாதையர்மண் என்ற பெருமையும் கிடைக்கும்.அதே போல நீங்கள் எப்போது இந்துதேசியத்திற்குள் உங்களைஅடைத்துக்கொள்கிறீர்களோ அப்போதுஇந்திய நாட்டின் பூர்விகசொந்தக்காரர்களாகிவிடுவீர்கள். இதைதவிர்த்து நீங்கள் என்ன செய்தாலும்துரோகிகள் தான், வந்தேறிகள் தான்..
வார்த்தையைக் கையாளுவதால் நான்
ஒரு வகுப்பு வெறியன் என்று இந்திய
தேசியவாதிகளும், தேச பக்தர்களும்
கூறலாம். அதற்காக நான்
பயப்படவில்லை.
இந்திய தேசம் ஒரு விசித்திரமான
தேசம்; அத்தேசத்தின் பக்தர்களும்
ஒரு விசித்திரமான மக்களே யாவர்.
இந்தியாவிலுள்ள தேசியவாதியும்,
தேசபக்தனும் தங்கள் சொந்த சகோதர
மக்கள் சாதாரண மனிதர்களை விடக்
கீழாக நடத்தப்படுவதைக் கண்கூடாகப்
பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
அவர்களுடைய
மனிதத்தன்மை இக்கொடுமைக்குஎதிராகக்
கொதித்தெழவில்லை. ஆணும்
பெண்ணும் யாவராயிருப்பினும்
அவர்க்கு மனித உரிமைகளை மறுக்க
முடியாது என்பதை அவர்கள்
அறிந்துள்ள போதிலும்
செயல்முறையில்
அதனை உணர்ந்து நடக்க வேண்டும்
என்கிற குடியுரிமையுணர்
வு அவர்களிடம் இல்லை. ஒடுக்கப்பட்ட
வகுப்பினர் அனைவரும்
பொது ஊழியத்துறையிலிர
ுந்து விலக்கப்படுவதை அவர்கள்
காணவே செய்கின்றனர். ஆனால்
அது அவர்களுடைய நீதியுணர்வையும்
, நேர்மையுணர்வையும்
தூண்டாமலிருப்பதுதான்
வியப்புக்குரியது.
மனிதனையும் சமூகத்தையும்
பீடித்துள்ள நூற்றுக்கணக்கான
கொடுமைகள்
அவர்களுக்கு நன்கு தெரிந்தனவே.
ஆனால் அவை எதுவும்
அவர்களுக்கு அருவெருப்பை தருவதாக
இல்லை!"
- அண்ணல் அம்பேத்கர்
(தொகுதி:5, பக்கம்:154)
இந்திய தேசம் குறித்தும் சாதிஇந்துக்களின் மனப்பாங்கு மற்றும்செயல்பாடு குறித்தும் அண்ணல்அம்பேத்கர் உதிர்த்த வார்த்தைகள்தான்மேலே இருப்பவை. ஆண்டுகள் பலகடந்துவிட்டன. ஆனால் அவர்களின்மனப்பாங்கிலும் செயல்பாட்டிலும் எந்தஒரு சிறு மாற்றமும் ஏற்பட்டதாகதெரியவில்லை என்பதையே இப்போதும்தொடரும் இந்துத்துவ வெறியர்களின்வன்முறைப் பேச்சுகளும் செயல்களும்நமக்குஉணர்த்திக்கொண்டேயிருக்கின்றன.
ஒரு சாதி இந்துவின் சொல்லும் செயலும்முற்றிலும் முரணானதாக இருக்கிறது.அவர் தனது வார்த்தைகளின் மூலம்உலகத்திலேயே அதிநல்லவராகதன்னைக்காட்டிக்கொள்கிறார். ஆனால்அவரின் செயல்பாடுகளோஅருவறுக்கத்தக்கதாக இருக்கின்றன.
தன்னைப் போன்ற அனைத்துஉணர்வுகளும் உரிமைகளும்உடல்புலன்களும் உணர்ந்தறியும்அறிவுமுடைய சக மனிதனை எந்த ஒருசாதி இந்துவும் தனக்கு சமமானவனாககருதுவதற்கு தயாராயில்லை. தான் ஒருகுறிப்பிட்ட சாதியில் பிறந்தவர்என்பதற்காகவே தான் மற்றவர்களைவிடஉயர்ந்தவர் என்றும் மற்றவர்களை மிககீழானவர்களாக நடத்துவதற்குசிறப்புரிமைகள் உடையவர் என்றும்அவர் கருதுகிறார். ஒரு பசுவை நடுவீடுவரை அழைத்துச்சென்று அதன்கோமியத்தை புனிதமானதாகஉணரக்கூடிய சாதி இந்துவுக்குதன்னைப்போன்ற சக மனிதனின் நிழல்தன் மேல் படுவதும் விரும்பதகாததும்மிகுந்த கசப்புக்குரியதுமாக இருக்கிறது.
இதோ ஆர்எஸ்எஸ் கும்பல் தனதுவார்த்தை ஜாலங்களால் இரண்டாம்முறையும் மத்திய ஆட்சியைப்பிடித்திருக்கும் சூழலில் இந்தஇந்துத்துவ உணர்வானது திட்டமிட்டுமேலும் மேலும் வளர்க்கப்படுகிறது.
மோடி என்ற ஒற்றை நபரின்கண்ணசைவில்ஆடிக்கொண்டிருக்கிறது மொத்த காவிக்கூட்டமும். மோடியோ ஆர்எஸ்எஸ் ஸின்கைப்பிள்ளையாக ஆடும் தஞ்சாவூர்பொம்மையாக இருக்கிறார். மோடிகுஜராத்தில் இருந்தபோது மேற்கொண்டதீவிர இந்துத்துவ வெறிச்செயல்களுக்குபலனாகவே இன்று பிரதமர் பதவியில்உட்கார வைக்கப்பட்டிருக்கிறார். அவரின்தீவிர சிறுபான்மை விரோதப் போக்குஅனைவரும் அறிந்ததே. அதனாலேயேஅவரின் மீது மிகுந்த எதிர்பார்ப்போடும்நம்பிக்கையோடும் இந்தபதவிக்குரியவராகஅங்கீகரிக்கப்பட்டிருக்கிறார்.
நாட்டிலுள்ள ஒட்டுமொத்தமக்களும்தானே வாக்களித்து மோடியைபிரதமராக தேர்ந்தெடுத்தார்கள், ஏதோபார்ப்பனர்களும் ஆர்எஸ்எஸ்காரர்களும்மட்டுமே தேர்தலில் பங்கேற்றது போலபேசுகிறீர்களே என்று உங்களுக்குதோன்றலாம். மோடியின் முழுஉருவத்தையும் உறித்துக்காட்ட இந்தபதிவு போதாதெனினும்சிலவற்றையாவது இங்கு சுட்டிக்காட்டவிரும்புகிறேன்.
டீக்கடை வைத்திருந்தவர் இன்றுபிரதமராகியிருக்கிறார் என நாவலிக்கபெருமை பேசுகிறார்கள். ஆனால் அவர்போட்ட இந்துத்துவ டீயில் ஆர்எஸ்எஸ்கொள்கைகளை கலந்து அதில் ஊழல்எதிர்ப்பு, தேச வளர்ச்சி என்ற டீகாஷனைசேர்த்து விநியோகித்த விஷயம் அவரைதொடர்ந்து உற்று நோக்குபவர்களுக்குநன்றாகவே புரியும்.
கோத்ரா ரயில் தீப்பிடிப்புச் சம்பவத்தைஅடுத்து அரங்கேற்றப்பட்ட கொடூரவன்முறையில் நூற்றுக்கணக்கானசிறுபான்மையின மக்கள் துள்ளத்துடிக்கவெட்டிக்கொல்லப்பட்டார்கள். உயிருடன்தீவைத்து எரிக்கப்பட்டார்கள்.இஸ்லாமியர்களின் வீடுகள், கடைகள்அனைத்தின் மீதும் பெட்ரோல்குண்டுகள் வீசப்பட்டன. கர்ப்பிணிப்பெண்ணின் வயிற்றைக்கிழித்து சிசுவைவெளியெடுத்து வெட்டிகொல்லுமளவிற்கு நரமாமிசவெறிப்பிடித்தவர்களாய்ஆட்டம்போட்டார்கள் இந்துத்துவவெறியர்கள்.
எல்லாம் முடிந்த பின் மோடி உதிர்த்தவார்த்தைகளை நீங்கள் கவனிக்கவேண்டும். " பெரும்பான்மையினருக்குசிறுபான்மையினர்அடங்கிப்போவதுதான் நல்லது.இல்லையெனில் இப்படியானவன்முறைகளை தவிர்க்கமுடியாது. " ஒருமாநிலத்தின் முதலமைச்சர் தன் சொந்தமக்களுக்கு, அடங்கிக் கிட, இல்லனாதீர்த்து கட்டிடுவோம் என பகிரங்கமிரட்டல் விடுத்தார்.
அதைவிடக்கொடுமையாக,கண்ணெதிரிலேயே உறவுகளைபறிகொடுத்து நிர்க்கதியாய் அகதிமுகாம்களில் தஞ்சமடைந்திருந்தார்கள்லட்சக்கணக்கான மக்கள்.கோழிப்பண்ணையில் கோழிகளைஅடைத்து வைப்பது போன்ற அந்தஅகதிமுகாம்களைப்பற்றி மோடி உதிர்த்தகருத்து வன்மத்தின் உச்சம். "அகதிமுகாம்கள் குழந்தை உற்பத்திமையங்களாகிவிட்டன" . இப்படிகுரோதத்தை உமிழ்ந்த நபர்தான் இன்றுவளர்ச்சியின் நாயகனாகஉருவகப்படுத்துகிறார்.
எதற்கு நடந்து முடிந்ததையேபேசிக்கொண்டிருக்கிறீர்கள் எனஅலுத்துக்கொள்கிறீர்களா?சலிப்பாயிருந்தாலும் இன்னும் கொஞ்சம்மீதி கதையிருக்கிறது. பிறகு உங்கள்கேள்விக்கு நிச்சயம் பதில் சொல்கிறேன்.
குஜராத் படுகொலைகளின்பழியிலிருந்து நீதிமன்றம் மோடியைவிடுவித்திருக்கலாம். ஆனால்அதன்பொருட்டு அவர் ஒருநாளும்உத்தமராகிவிட மாட்டார். அந்த வழக்கில்சாட்சி சொன்ன காவல்துறைகண்காணிப்பாளர், வாதாடியவழக்கறிஞர், விசாரித்த நீதிபதிஆகியோரின் கதி என்னவானது என்பதுநீங்கள் அறிந்த விஷயம் தான். சிலநினைவுகள் நம்மை விடாதுதுரத்திக்கொண்டேயிருக்குமல்லவா?அப்படி ஒன்று பல நாட்கள் என்னைஉறங்கவிடாமல் அழச் செய்திருக்கிறது.உயிர் பிச்சை கேட்டு இரு கைகளையும்கூப்பி உயிர் பிச்சை கேட்கும் முஸ்லீம்இளைஞனின் படம் அது. அதை வெறும்படம் மட்டும் என்று சொல்லமுடியாது, ஒருகொலைக்களத்தின் சாட்சி.
சரி, இஸ்லாமியர்களைதீர்த்துக்கட்டியதன் மூலம் ஆர்எஸ்எஸ்ஸின் நம்பிக்கைக்குரியதளபதியாயிற்று. ஆனால் முழுஅறுவடையையும் செய்ய அது மட்டுமேபோதுமா என்ன? ஆர்எஸ்எஸ் ஆல்அவரை பாஜகவின் பிரதம வேட்பாளராகமட்டும்தான் அறிவிக்க முடியும். ஆனால்தேர்தலின் சூட்சுமத்தை கற்றுதெளிந்தவராச்சே மோடி,சும்மாயிருப்பாரா?
கடந்த தேர்தலின் போது மோடியைபிரதம வேட்பாளராகஅறிவிக்கப்பட்டபோது இரண்டுகோஷங்கள் முக்கியமாகவைக்கப்பட்டன. ஊழலற்ற ஆட்சி,குஜராத் போன்று நாடெங்கும் வளர்ச்சி .இரண்டுமே கடைந்தெடுத்த பொய்கள்என்பதை பலரும் பலமுறைஆதாரங்களோடு நிரூபித்தாயிற்று.
ஊழலற்ற ஆட்சியென நீட்டி முழங்கியமோடியின் குஜராத் அமைச்சரவைசகாக்கள் பலர் மீதும் ஊழல் கறைஅழுந்த படிந்திருக்கிறது. குஜராத்தில்உபரி மின்சாரம் சேமிக்கப்படுமளவிற்குமின்உற்பத்தியில் வளர்ச்சி என்பதுமேலோட்டமான உண்மை. ஆனால்அங்கு மின்சாரமே எட்டிப்பார்க்காதநூற்றுக்கணக்கானகிராமங்களிருக்கின்றன.விவசாயிகளுக்கு அதிக விலையில்மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது.அப்படியே காசு போனால் போகட்டும்,வேறு வழியில்லையே எனவிண்ணப்பித்த பல விவசாயிகளுக்கும்மின் இணைப்புகளேகொடுக்கப்படவில்லை. ஆனால்கார்ப்பரேட்டுகள் சிவப்புக்கம்பளமிட்டுவரவேற்கப்பட்டார்கள். விவசாயிகளின்நிலங்கள் வலுக்கட்டாயமாகபறிக்கப்பட்டு கார்ப்பரேட்டுகளுக்கு மிகமிக குறைந்த அடிமாட்டுவிலையில்தாரை வார்க்கப்பட்டது. இப்படியெல்லாம்கார்ப்பரேட்டுகளின் செல்லநாய்குட்டியாய் வாலாட்டியதன் பலனாகபணமுதலைகள் அவரை தலைமேல்வைத்து கொண்டாடினார்கள்.அவருடைய கூட்டாளி கார்ப்பரேட்டுக்கொள்ளையன் அதானி மற்றும் இன்னபிற பண முதலைகளின் ஆசிபரிபூரணமாக இருந்தது.
ஆர்எஸ்எஸ் ஸின் ஆசி +கார்ப்பரேட்டுகளின் காசு = மோடியின்தேர்தல் வெற்றி. ஊடகங்களுக்கு பணம்தண்ணீராய் வாரியிறைக்கப்பட்டது.புலனாய்வு ஊடகங்கள் சில இப்படி மோடிகுறித்த கட்டுரைக்காக பணம்கைமாறியதை ஆதாரத்தோடுநிரூபித்தது. பேஸ்புக் ட்வீட்டரிலும்மோடியை புகழ்ந்து தள்ளவும் பரப்புரைசெய்யவும் ஆயிரக்கணக்கான போலிகணக்குகள் ஆரம்பிக்கப்பட்டன.இதற்காகவே அமெரிக்காவைச் சேர்ந்தஒரு தனியார் நிறுவனத்தை குத்தகைஎடுத்தார்கள். சமீபத்தில் மோடி வெற்றிப்பெற்ற வாரணாசி தொகுதியில் மூன்றேகால் லட்சம் போலி வேட்பாளர்கள்சேர்க்கப்பட்டிருப்பதுகண்டுபிடிக்கப்பட்டது. மோடிஏறக்குறைய இதே அளவு வாக்குவித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றார்என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்படி ஆர்எஸ்எஸ் ஸின் வெறியூட்டும்பேச்சுகள் ஒருபுறம் சாதி இந்துவைஉசுப்பேற்றி விட, கார்ப்பரேட்டுகளின்கள்ள பணத்தின் உதவியோடு மோடிஎன்ற போதை வஸ்து இந்திய தேர்தல்சந்தையில் வெற்றிகரமாக மார்க்கெட்டிங்செய்யப்பட்டது. இதுதான் மோடி வெற்றிபெற்ற கதை.
மோடி தனது தேர்தல் பிரச்சாரத்தின்போதே தனது அமையவிருக்கும் அரசுஎதை நோக்கி பயணிக்கப்போகிறதுஎன்பதை தெளிவாகவேஉணர்த்திவிட்டார். வளர்ச்சி வளர்ச்சி எனமூச்சுப்பிடித்து கத்தினாலும் அதன்அடிநாதமாய் இந்துத்துவ சரக்குமறைந்தே பயணித்துவந்தது.அப்போதுதான் மோடி அந்த மகத்தானஉளறல் தத்துவத்தை உதிர்த்தார்.இந்திய தேசியம் என்பதே இந்து தேசியம்தான் என்பதே மோடியின் நாடறிந்தஉளறலின் தொடக்கம். அன்று முதல்இன்றுவரை அவரும் அவரின்சகாக்களும் ஓயாதுஉளறிக்கொண்டேயிருக்கிறார்கள்.ஆனால் இந்த உளறல்கள் எல்லாம்திட்டமிடப்பட்டவையே. சரி. அது என்னஇந்து தேசியம்?
முதலில் தேசியம் என்பதற்கு ஆய்வியல்வல்லுநர்கள் என்ன வரையறைவைத்திருக்கிறார்கள் என்று பார்ப்போம்.தேசியம் எனப்படுவது கீழ்க்கண்டகூறுகளை கொண்டிருக்க வேண்டும்.
* பொது மொழி
* பொது பண்பாடு
* சேர்ந்தார் போன்ற நிலப்பகுதி
* பொதுவான பொருளியல் வாழ்வு
* பொது பண்பாட்டில் உருவான
உளவியல் உருவாக்கம்
இப்போது இதனடிப்படையில்இந்துத்துவ அரசியலை அணுகினால்இந்து தேசியத்தை கட்டிஎழுப்புவதற்கான ஆயத்தங்களை காவிக்கூட்டத்தினர் தொடர்ந்து செய்துவருகிறார்கள் என்பது புலனாகிறது.இந்தியாவில் பலமொழி பேசும் மக்கள்வாழ்ந்து வருகிறார்கள்.
ஆனால் இவர்கள் கட்டியமைக்கவிரும்பும் இந்து தேசியத்திற்கு தோதாகசமஸ்கிருதத்தின் வழிவந்த இந்தியைஇந்தியா முழுமைக்குமானபொதுமொழியாக திணிக்கதுடிக்கிறார்கள். மோடி அரசுபதவியேற்றதும் இந்த இந்துத்துவ ரயில்றெக்கை கட்டி பறந்தது.
அனைத்து மத்திய அலுவலகங்களிலும்இந்தி கட்டாய தொடர்புமொழியாக்கப்பட்டது. மாநிலஅரசுகளுக்கு அனுப்பக்கூடியசுற்றறிக்கைகள் அனைத்தும் இனிஇந்தியிலேயே இருக்குமென்றும் மாநிலஅரசுகளும் மத்திய அரசோடுஇந்தியிலேயே தொடர்பு கொள்ளவேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டது.அதைவிட பொதுமக்கள் படித்துதெரியவேண்டிய அரசின்நலத்திட்டங்கள் மற்றும் அறிக்கைகள்கூட இந்தியிலேயே ஊடகங்களுக்குஅனுப்ப தொடங்கினார்கள்.
இந்தியில் பேசுவதையே இந்தியாவின்பெருமைமிகு அடையாளமாக மாற்றத்தொடங்கினார்கள். இன்று வைகோ ,தான் ஆடவில்லையம்மா தசையாடுது,ரேஞ்ஜில் புகழ்ந்துதள்ளும்வாஜ்பாய்தான் இதற்கானஆரம்பவிதையை விதைத்தவர். ஐநாவில்முதன்முறையாக இந்தியில்உரையாற்றியவர் என்பதைபூதாகரமாக்கி மக்களிடையேபரப்பினார்கள். அதன்தொடர்ச்சியாகத்தான் மோடி இப்போதுதான் செல்லும் இடங்களிலெல்லாம்இந்தியில் உளறிக்கொட்டிவருகிறார்.இந்தி படிப்பது நல்லது, அது அறிவைக்கொடுக்கும், வேலை கொடுக்கும்என்பதாக பார்ப்பன அறிவு ஜீவிகள்மற்றும் ஊடகங்களின் வாயிலாககருத்துருவாக்கம் புனையப்பட்டது. இந்திபடித்தால் என்ன வேலை கிடைக்கும்என்பதற்கு வட இந்தியாவிலிருந்துஇங்கு வந்து கொத்தடிமைகளாகஅல்லல்படும் தொழிலாளர்களும், அதுஎன்ன மாதிரியான புத்தியைகொடுக்கும் என்பதற்கு மோடி உள்ளிட்டகாவிக்கூட்டமும் நம் கண்முன்னாலுள்ளஉதாரணங்கள்.
ஆக ஒரு தேசியத்தை கட்டியமைப்பதற்குஒரு பொதுமொழி தேவைஎன்கிறவகையில் அவர்கள் தங்கள்இந்துத்துவ சரக்குகளுக்கு தோதானசமஸ்கிருதத்தின் வழிதோன்றலானஇந்தியை தேர்ந்தெடுக்கிறார்கள். அப்படிஇந்து தேசியம் கட்டியமைக்கப்படவேண்டுமெனில் நாம் நமதுதாய்மொழியான தமிழை முற்றிலும்மறந்து இந்தியைவரிந்துக்கட்டிக்கொண்டால்தான்இயலும். இந்தியாவின் பலமொழிகோட்பாட்டை தகர்த்து , இந்தியா - இந்தி -இந்துத்துவம் என்று கட்டமைப்பதேஇவர்களின் நோக்கம்.
அதற்கடுத்து, பொதுவான பண்பாடு.இந்தியா முழுமைக்குமான பொதுவானபண்பாடு என்ற ஒன்றிருக்கிறதா?
இந்திய தேசத்திற்கென பொதுவானபண்பாடு என்ற ஒன்றிருக்கிறதா?இல்லையென்றே வரலாறு சொல்கிறது.இந்தியா என்கிற தேசமே பிரிட்டிஷாரின்தொடர் ஆக்கிரமிப்புகளால்கட்டியமைக்கப்பட்ட ஒன்று தான்.அப்படியிருக்க இந்தியாமுழுமைக்குமான பொதுவான பண்பாடுஎன்பது சாத்தியமே இல்லாத ஒன்று.அப்படி எனில் இந்த காவிக்கூட்டத்தினர்எதை இந்தியாவின் பொதுப் பண்பாடாகமுன்னிறுத்துகிறார்கள்?
ஆரியப் பண்பாட்டையே இந்தியபண்பாடாக நிலைநிறுத்தக்கூடியமுயற்சிகளையே தொடர்ந்து செய்துவருகிறார்கள். காவிக்கூட்டத்தினரைஇவ்விஷயத்தில்அம்பலப்படுத்துவதற்குமுன்காங்கிரஸையும் கொஞ்சம் அலசுவோம்.காங்கிரஸின் மூலக்கர்த்தாக்களாகஅறியப்படுகிற நேரு பார்ப்பனரும் காந்திபனியாவும் தங்களைபொதுவுடைமைவாதிகளாககாட்டிக்கொண்ட தீவிரஆர்எஸ்எஸ்க்காரர்களே.
காந்தி தனது கடைசி மூச்சுவரைசாதியத்தின் தீவிர ஆதரவாளராகவேஇருந்தார். அதற்காக அவர் ஒரு கணமும்வருந்தியதேயில்லை. " எனக்கு சோர்வுஏற்படும்போதெல்லாம் பகவத் கீதையைஎடுத்து வாசிப்பேன். அதில் எனது பலகேள்விகளுக்கு விடை கிடைத்து தெளிவுபிறக்கும் " என்பது காந்தியின் கூற்று.
நானே நான்கு வர்ணங்களையும்உண்டாக்கியவன் என்று சாதிக்குபுனிதமுலாம் பூசியபகவத்கீதையிலிருந்தே தனதுசெயல்களுக்கான ஊக்கத்தைப்பெற்றார் என்பது காந்தியின் ஒப்புதல்வாக்குமூலம். இப்படிப்பட்ட காந்தியின்கனவு தேசத்தைதான் காங்கிரஸார்தொடர்ந்து முன்னிறுத்திவந்தார்கள்.தமிழ்தேசியத்தின் புதிய சரக்கானதமிழருவி மணியனும் காந்திய மக்கள்இயக்கம் என்ற பெயரில் காந்தியைஉயர்த்தி பிடிப்பதிலிருந்தே அவர்கள்முன்வைக்கும் தேசியத்தின் மாதிரி நம்கண்முன் தெளிவாகவே தெரிகிறது.தேவைப்படும்போதெல்லாம்மதச்சார்பின்மை முகமூடியை எடுத்துஅணிந்துகொள்ளவேண்டிய கட்டாயம்காங்கிரஸுக்கு இருப்பதால், இப்படியானஅப்பட்டமான சாதி வெறியரான காந்திகாங்கிரஸை விட பாஜகவிற்கே பெரிதும்பயன்படுவார் என்பதை உணர்ந்த மோடி ,இப்போது காந்தியை ஆரத்தழுவிக்கொண்டிருக்கிறார்.
ஆரியர்களின் மதச்சடங்குகளையும்வேதங்களையும் சாஸ்திரங்களையும்மகாபாரதம், ராமாயணம், பகவத்கீதைபோன்ற புனைவுக்கதைகளையுமேஇந்தியா முழுமைக்கான பொதுப்பண்பாடாக ஆக்கிவிட காவிப்படையினர்துடிக்கிறார்கள்.
இந்தியா பல மதங்களை உள்ளடக்கியநாடு. மேலும் மதமற்றவர்களாகதங்களை அறிவித்துக்கொண்டபல்லெண்ணிக்கையிலான மக்களையும்கொண்ட நாடு. ஆனால் இங்கே இந்துபண்டிகைகள்முன்னிறுத்தப்படுமளவிற்கு வேறு மதப்பண்டிகைகள்முக்கியத்துவபடுத்தப்படுவதில்லை.இந்தியா என்பதே இந்துக்களின்தேசமாகவும் மற்றெல்லாரும்வந்தேறிகளாகவும் உருவகிக்கிறார்கள்கைபர் போலன் கணவாய் வழியேஇந்தியாவுக்குள் வந்தேறியஆரியக்கூட்டத்தினர்.
சரி, மற்ற மதக்காரர்களை விடுங்கள்,இந்துக்களுக்குள்ளேயேனும்பொதுவான பண்பாடு என்ற ஒன்றுஇருக்கிறதா என்றால் அதற்கும் இல்லைஎன்றே பதில் கிடைக்கிறது.
இந்துமதத்தில் கடவுளர்களின்எண்ணிக்கைக்கு அளவேயில்லை.அள்ள அள்ளக் குறையாதகுப்பைகளென குவிந்துகிடக்கும்புராணங்களிலிருந்தும் சொல்வழிகதைகளிலிருந்தும் அவரவர்விருப்பப்படி புதுப்புதுக்கடவுளைஉருவாக்கிக்கொள்ளலாம். ஆனால்அய்யனார் அல்லது ஒண்டிவீரப்பன்அல்லது மதுரைவீரன் கோயில் பூசாரிஒருபோதும் பெருமாள் அல்லது சிவன்கோயிலின் கருவறைக்குள் நுழையவேமுடியாது.சரி, இதை கூட விடுங்கள்.அய்யனாரைக்கும்பிடுகிற அதேதப்பாட்டம், பறை, கறிசோறுபடையலோடு அதே மதத்தின்கடவுளர்களாக சொல்லப்படுகிறபெருமாளையும் சிவனையும் வணங்கமுடியுமா? அனுமதிப்பார்களா? பின்எங்கிருக்கிறது இந்தியாமுழுமைக்குமான பொது பண்பாடு?
அடுத்து தேசியம் குறித்த வரையறையில்வருவது சேர்ந்தாற்போன்ற நிலப்பகுதி.காவிக்கூட்டத்தினர் ஆட்சியைப்பிடிக்கும்போதெல்லாம் அகண்ட பாரதம்அமைப்பதே எங்கள் லட்சியம்,இந்தியாவின் ஓரடி மண்ணைக்கூடஅந்நியருக்கு விட்டுத்தர மாட்டோம்என்றெல்லாம் வீரவசனம் பேசுவதுவழக்கம். ஆனால் இந்தியா என்ற நாடுஎப்போது உருவானது? முதன்முதலில்முகமதிய படையெடுப்பின் போதுதான்இங்கிருப்பவர்களிடமிருந்து தங்களைவேறுபடுத்திக்காட்டசிந்துநதிக்கரையோரம் வாழ்ந்தமக்களை இந்தியர்கள் என்றுஅழைத்ததாக வரலாற்றுக்குறிப்புகள்கூறுகின்றன.
பின் ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில்சிதறுண்டு கிடந்த பலதேசங்கள்படையெடுப்புகளின் மூலம் ஒரேநிலப்பரப்பாக இணைக்கப்பட்டன.அவர்களின் நிர்வாக வசதிக்காகஉருவானதே இன்றைய இந்தியா. இதுஉண்மையில் பல தேசங்களின்ஒன்றியமேயொழிய ஒரே நாடு என்னும்சொல்லப்படுவதற்கான தகுதியைஉடையதல்ல.
தேசியம் குறித்த வரையறையில் கடைசிகூறாக நாம் காண்பது பொதுவானபண்பாட்டில் உருவான உளவியல்.இந்தியா முழுமைக்கும் பொதுவானபண்பாடு என்பதே இல்லை என்றானநிலையில் அதனடிப்படையில்எந்தவிதமான உளவியலை மக்களிடம்காணமுடியும்? ஆனால் பார்ப்பனஊடகங்களும் பார்ப்பன அடிவருடிஊடகங்களும் இப்படி ஒருபொதுப்படையான உளவியலைமக்களிடம் கட்டியெழுப்புவதில்தொடர்ந்து முக்கிய பங்காற்றிவருகின்றன. இந்தியா எனது தேசம்என்ற உணர்வானதுதேசபக்தியுணர்வின்அடையாளமாக்கப்பட்டு , மக்களின்சொந்த தேசிய அடையாளத்தைமறக்கடிக்க செய்கின்றன. மக்களின்தேசிய இன உணர்வானது திட்டமிட்டுமழுங்கடிக்கப்பட்டு இந்தியர் என்ற ஒருகுடையின்கீழ் அடைக்கப்படுகின்றனர்.இதை மீறி பேசும் எவரும் துரோகிகளாக,தீவிரவாதிகளாகஅடையாளப்படுத்தப்படுகிறார்கள்.
விழிப்பாயிருக்க வேண்டிய நாமோகாவிக்கூட்டத்தின் வளர்ச்சி கோஷத்தில்மதி மயங்கி இப்போது விழி பிதுங்கிநிற்கிறோம். என்ன செய்யப்போகிறோம்?
தேசம், தேசபக்தி, வளர்ச்சி என்றுகாவிக்கூட்டம் எதை சொன்னாலும் அதுஇந்து தேசியத்தை குறிப்பதாகவேஇருக்கிறது. மதச்சாற்பற்ற இந்தியாவில்ஒரு இஸ்லாமிய, கிறிஸ்தவ, சீக்கியமதகுருவிற்கு அனைத்திந்தியவானொலியில் நேரலையில்பேசுவதற்கான வாய்ப்பு கனவிலும்கிடைப்பதில்லை. ஆனால் ஆர்எஸ்எஸ்தலைவருக்கு கிடைக்கும். இவர்களின்இந்து தேசியத்தின் அடிப்படையேசிறுபான்மையின மக்களை சீண்டி,நாட்டைவிட்டே அவர்களைவிரட்டியடிப்பது தான். இப்படியொருதருணத்திற்காகவே காத்திருந்தஇந்துத்துவ வெறியர்களுக்குகாவிப்படை தளபதி மோடியின் கீழ்அமைந்த ஆட்சி பொன்னான வாய்ப்பாகதெரிகிறது.
வளர்ச்சி, வளர்ச்சி என்று நீட்டி முழங்கியமோடி, உலக வரைபடத்தில் லென்ஸ்வைத்து தேடி எல்லாவெளிநாடுகளுக்கும் போவதையேமுதன்மையான பணியாகவைத்திருக்கிறார். ஆனால்இந்தியாவிலோ இதுவரை தேர்தல்பரப்புரைக்காகவன்றி வேறெந்தமாநிலத்திலும்காலடிவைக்கவேயில்லை.
தேர்தல் முடிந்து மாதங்கள் பல ஆகியஇன்னும் அவரிடமிருந்தும் இன்ன பிறசகாக்களிடமிருந்தும் பிரச்சார தொனிவிட்டு விலகியதாகவே தெரியவில்லை.இந்திய மக்களின் பணம்ரூ.6500கோடியை கார்ப்பரேட்கொள்ளையன் அதானிக்குவாரிவழங்கிவிட்டு, ஆஸ்திரேலியாசென்று, கக்கூஸ் கட்ட வேண்டும், காசுகொடுங்கள் என கையேந்துகிறார்.
கிறிஸ்தவ தேவாலயங்கள், இஸ்லாமியமசூதிகள் என அனைத்துமே இந்துகோயில்களை இடித்துத்தான்கட்டப்பட்டன என்ற கீழ்தரமானபொய்யை தொடர்ந்துபரப்பிவருகின்றனர். சிலஇஸ்லாமியர்கள் பிரதமரை சந்தித்து,ராமர் கோயில் கட்டப்படவேண்டுமென்பதே தங்கள் விருப்பமெனதெரிவித்ததாக செய்தியொன்றுதிட்டமிட்டு டிசம்பர் 6க்கு முன்பரப்பப்பட்டது. இதன் மூலம் ஒரே கல்லில்இந்துத்துவக்கும்பல் பல காய்களைவீழ்த்த முனைகிறது. அதன்முதன்மையான நோக்கம்இஸ்லாமியர்களை சீண்டி திட்டமிட்டப்படிபதற்றத்தை உண்டாக்குவது.அடுத்ததாக, இஸ்லாமியர்களும்தங்களின் இந்து தேசியத்தையேவிரும்புகிறார்கள் என்ற பிம்பத்தைஉருவாக்குவது.
பதிவின் தொடக்கத்தில் படம்பிடித்துக்காட்டிய வெறிப்பிடித்த பேச்சுகளுக்குசொந்தக்காரர்களான காவிக்கும்பல்தான் திடீர்திடீரெனதூக்கத்திலிருந்து விழித்து வீலெனஅழும் குழந்தையைப் போலகலாச்சாரத்தை பாதுகாக்கிறோம் எனகாதுகிழிய சவுண்டு கொடுக்கதொடங்கிவிடுவார்கள். ஏற்கனவேபார்த்தபடி ஆரிய பண்பாடு, ஆரியகலாச்சாரம், ஆரிய மத நூல்களானராமாயணம், மகாபாரதம் ஆகியவையேஇவர்களின் இந்து தேசியஅடிப்படையென்றால், அந்த கேடுகெட்டகலாச்சாரமோ, பண்பாடோ அற்றபகுத்தறிவாளர்களாக இருப்பதே சாலச்சிறந்தது.
சும்மாவே சீறும் இந்துத்துவ விஷப்பாம்பிற்கு , ஆட்சி என்னும் முட்டையைகொடுத்து தெம்பாய் நம்மை கொத்திகுதறும்படி வாய்ப்பையும்கொடுத்திருக்கிறோம். ஆனால் இந்தவிஷ ஜந்துக்களின் எண்ணிக்கைஅதிகமாகி பலுகிப் பெருகுவதற்குமுன்னாவது நாம் விழித்துக் கொள்ளவேண்டும். மதச்சார்பற்றவர்களும் மதநல்லிணக்கத்தை விரும்புபவர்களும்கைக்கோர்த்து முன்னிலும் வலிமையாய்இந்த காவிக்கூட்டத்தை எதிர்த்துஒடுக்கியாக வேண்டும். இல்லையேல்வீழ்ச்சிக்குள்ளாகப்போவதுசிறுபான்மையினர் மட்டுமல்ல, இந்தநாட்டின் கூட்டுக் கதம்பங்களானபல்வேறு தேசிய இனங்களும்ஒட்டுமொத்தமாக அழித்தொழிக்கப்படும்என்பதை மறந்துவிட வேண்டாம்.
- LEO JOSEPH D
- dleokommedu@gmail.com