ஈழமும் தமிழ் தேசியஅரசியலும் ஒரு பார்வை
பிரபாகரன் என்ற வார்த்தையிலிருந்தேஇந்த பதிவை தொடங்குகிறேன்.பிரபாகரன் ஈழத்தில் உள்ள தமிழர்களின்விடுதலைக்காக போராடிய ஒருமாபெரும் தலைவர். அதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. ஆனால் ஒட்டுமொத்ததமிழர்களுக்குமே அவர்தான் தலைவர்என்பது கடைந்தெடுத்த பித்தலாட்டம்,அப்பட்டமான பொய். ஒட்டுமொத்த ஈழதமிழர்களுக்குமே முதலில் அவர்தலைவராக இல்லை என்பதே உண்மை.ஈழ தமிழர்களில் ஒரு பிரிவினர், அதுபெரும்பான்மை பிரிவாகவும்இருக்கலாம், அவரை தங்களுக்கானதலைவராக ஏற்றுக்கொண்டார்கள்.இலங்கை என்ற சிறு நாட்டிலேயேகொழும்பு தமிழர்கள், யாழ்ப்பாணதமிழர்கள், மலையகத் தமிழர்கள்உள்ளிட்ட பல பிரிவு இருந்த நிலையில்அவர்கள் அனைவரையும்பிரதிபலிப்பவராக பிரபாகரன்இருக்கவில்லை. சரி, அப்படியே அவர்ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களுக்குமேதலைவராக இருந்திருந்தாலும் அவரைஎந்த நிலையிலும் உலகிலுள்ள ஒட்டுமொத்த தமிழர்களின் தலைவராகஅடையாளப்படுத்த முடியாது. காரணம்பிரபாகரனே தனக்கான அப்படி ஒருதளத்தை அமைத்துக் கொள்ளவில்லை.
இங்கு எழுதப்படாத சட்டமாக ,பொதுவிதியாக ஒன்றை உருவாக்கிவைத்திருக்கிறார்கள். அதாவது தமிழ்உணர்வாளனாக என்னைஅடையாளப்படுத்திக் கொள்ளவேண்டுமெனில் நான் நிச்சயம்பிரபாகரனை ஆதரிப்பவனாகத்தான்இருக்க வேண்டும், பிரபாகரன் வழுவாநிலை கொண்ட மகான் என்பதைமனப்பூர்வமாக ஒத்துக்கொண்டுபகிரங்கப்படுத்த வேண்டும். இப்படிதமிழ், தமிழர் நலன் என்று பேசுபவர்கள்தங்களின் பரந்த வட்டத்தை ஈழத்தைமட்டுமே சுற்றி அமைக்கிறார்கள்.உலகின் வேறு எந்த பகுதியில்தமிழர்கள் துன்புற்ற போதும் இவர்கள்இரத்தம் கொதிப்பதில்லை, நரம்புகள்புடைப்பதில்லை. ஆனால் ஈழம் என்றதும்பாம்பாட்டியாக இவர்கள் நெளியஆரம்பித்துவிடுகிறார்கள். அந்தமகுடிக்கு கட்டுப்பட்ட பாம்பாகமற்றவர்களும் ஆட வேண்டும் எனஎதிர்பார்க்கிறார்கள். தப்பி யாரேனும்பிரபாகரனை விமர்சித்தால்அவர்களுக்கு அடுத்த நொடியே தமிழ்துரோகி பட்டம் கட்டப்படும். உண்மையில்இங்கு ஈழம் ஈழம் என்று கூவி ரத்தக்கவிச்சை அரசியல் செய்பவர்களைவிடவும் ஈழத் தமிழர்களின் வரலாற்றில்வேறு துரோகிகள் இருக்க முடியாது.பிரபாகரனை எல்லோருக்குமானதலைவராக ஏற்பதற்கான எந்தகூறுகளும் அவரிடமில்லை என்பதையும்தாண்டி ஈழம் இங்கு பிரதானஅரசியலாக்கப்படுவதன் பின்னனியில்உள்ள காரணங்களை அனைவரும்அறிந்து கொள்ள வேண்டியதுதலையாயக் கடமை..
ஈழம் இங்கே பரபரப்பானஅரசியலாக்கப்படுவதன் பின்னனிஎன்ன? அறிவார்ந்த அரசியல்,உணர்ச்சிகர அரசியல் என்ற இருபகுதிகள் உண்டு. பெரும்பாலானஅரசியல் கட்சிகள் முன்னெடுப்பது இந்தஉணர்ச்சிகர அரசியலைத் தான்.
அறிவார்ந்த அரசியல் என்பதுஒருவனிடம் கேள்விகளை மட்டுமேஎழுப்பி அவனையே அதற்கு விடை தேடவைப்பது, அவனாக சிந்தித்து எது சரி,எது தவறு என தெளிவதற்கான களத்தைஅமைத்துக் கொடுப்பது.
உணர்ச்சிகர அரசியல் மூளையைமழுங்கடித்து உணர்ச்சிகளைதூண்டிவிட்டு தனக்கான ஆதாயத்தைதேடிக் கொள்வது. சிந்திப்பதற்கோதானாக முடிவெடுப்பதற்கோகேட்பவனுக்கு எந்த வாய்ப்பும்உரிமையும் அளிக்கப்படுவதில்லை.
தனக்கு கோஷமிடவும் கொடி கட்டவும்சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைகளாய் எப்போதும் தன்கட்டுக்குள் அடங்கி இருக்கவும்உணர்ச்சிகர அரசியலே சாதகமானதாகஇருப்பதால் ஓட்டு பொறுக்கி கட்சிகள்அனைத்துமே இந்த உணர்ச்சிகரஅரசியலையே முன்னெடுக்கின்றன.
அய்யகோ ஈழத்தைப் பாரீர் என்றுஅழுகையோடு பேசினாலோ, அந்தராஜபக்சேவை தூக்கிலிடு என்று நரம்புபுடைக்க கண்கள் சிவக்க சவால்விட்டாலோ உணர்வால்ஆட்கொள்ளப்பட்டவர்களாக எளிதில்அதில் வசியமாகிவிடுகிறோம். கருணை,கோபம், வெறுப்பு, ஆவேசம் போன்றஉணர்வுகளை தூண்டிவிட்டு அதன்பலாபலன்களை தியாகி என்கிறசர்வநாமத்தில் அனுபவித்துக்கொள்ளலாம்.
அறிவார்ந்த அரசியலை விட ஏன்உணர்ச்சிகர அரசியல் அதிகஈர்ப்புக்குள்ளாகிறது? ஒரு கமர்ஷியல்படமும் கருத்துள்ள படமூம் ரசிகர்களிடம்பெறுகிற வரவேற்பை போலதான் இந்தஅரசியல் கூறுகளும்.
அறிவார்ந்த அரசியல் பிரச்சனைகளுக்குதீர்வை நமது சுய புத்தியுடன் ஆய்ந்துதெளிகிற பொறுப்பை அளிப்பதால் அதுசமூக விமர்சனத்தோடு சுயவிமர்சனத்திற்கும் இட்டுச் செல்கிறது.சமூகத்தின் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும்நம்மையும் பொறுப்பாளியாக்குகிறது.
ஆனால் உணர்ச்சிகர அரசியல் அப்படிஅல்ல. அது எல்லா செயல்களுக்கும்மற்றவர்களை கை காட்டிஉசுப்பேற்றிவிடுவதோடு தன் கடமையைமுடித்துக் கொள்கிறது. நமக்குவசதியானதும் இதுதானல்லவா?இதுவே அரசியல்வாதிகளுக்கும் பெரும்வசதியாக இருக்கிறது.
அதனால்தான் அங்கே பாருங்கள், ஒருஇனத்தையே கருவறுத்துவிட்டார்கள்என்று உருக்கமாக பேசினாலோஆவேசமாக முஷ்டி உயர்த்தினாலோநாம் மிக எளிதில் ஈர்க்கப்படுகிறோம்.அந்த இன ஒழிப்பில் நமக்கு பங்கில்லை.நாம் நீதி நியாயம் பேசக் கூடியபார்வையாளர் இடத்திலேயேஎப்போதுமிருக்கிறோம்.
இங்கு தமிழகத்திலும் தமிழர்கள்இருக்கிறார்கள், அதில் சாதிப் பேயினால்ஆயிர கணக்கானவர்ள் கடித்துகுதறப்படுகிறார்களே? இது பற்றி ஏன்பெரும்பாலான அரசியல்வாதிகள்பேசுவதில்லை? ஏனென்றால்உணர்ச்சிகர அரசியலின் மூலம் சாதியைவளர்க்கலாமேயொழிய அழிக்கமுடியாது. சாதி ஒழிப்பு அறிவார்ந்தஅரசியலின் ஒரு பகுதி. இந்த சாதிகொடுமையில் நாமும் பங்கேற்பாளர்கள்,அதாவது குற்றவாளிகள். அப்படி இருக்கஅதன் மூலம் ஓட்டு வங்கியைஉருவாக்குவதென்பது இயலாதவிஷயம். சாதி ஒழிப்பு என்று உங்களைகுற்றவாளியாக உணரச் செய்வதை விட ,தமிழ் , தமிழர் நலன் என்று பேசி உங்கள்உணர்வுகளை உசுப்பிவிட்டு ஓட்டுகளைவேட்டையாடுவதென்பது அரசியல்வாதிகளுக்கு மிக எளிதானதாகஇருக்கிறது. அதனாலேயே இங்கும் ஈழஅரசியல் வியாபாரம் கொடிகட்டிபறக்கிறது..
தமிழ் தேசியம் என்றால் என்னவென்றுஎன்னைப் போன்ற தமிழ் துரோகிகளைவிட்டுவிட்டு ஏதேனும் தமிழுக்காகவேஉயிரையும் அர்ப்பணித்த உங்கள் சகநண்பர்களிடம் கேட்டுப் பாருங்கள்.தமிழராக ஒன்றுபடுவதுதான் தமிழ்தேசியம் என்பார்கள். சரி, திராவிடம்என்றால் ஏதோ கடவுள் மறுப்பு,பகுத்தறிவு, மூட நம்பிக்கை ஒழிப்பு, சாதிஒழிப்பு, பெண் விடுதலை என்றெல்லாம்பிதற்றி திரிகிறார்களே, தமிழ்தேசியத்தின் பேசுபொருள்கள் தான்என்ன என்று அடுத்த கேள்விகேளுங்கள்.
தமிழ், தமிழர் நலன், தமிழ்நாட்டைதமிழர்களே ஆட்சி செய்தல், தமிழ்தேசியம் அமைத்தல் இப்படியான தேன்மொழுகிய பதில் கிடைக்கும். இந்ததேனுண்ட மயக்கத்திலியே நீங்கள்இருந்துவிட்டால் அடுத்தும் ஒரு கேள்விஇருக்கிறதே, அதை யார் கேட்பது?அதனால் கொஞ்சம் நிதானமாக இந்தகேள்வியையும் கேட்டுவிடுங்கள்.
தமிழர்களாக ஒன்றுபடுவது சரி,தமிழர்களை எப்படிஒன்றுபடுத்துவீர்கள்? இங்கிருக்கிறதமிழர்கள் எல்லாம் சாதி ரீதியாகஅல்லவா பிரிந்து கிடக்கிறார்கள்? இந்தசாதி பிணக்குகளை களைவதற்கு தமிழ்தேசியம் எதை முன் வைக்கிறது?
இந்த கேள்வியே நீங்கள் துரோகிபெரியாரின் கையாள் என்பதை அந்ததேசிய போராளிக்கு உணர்த்திவிடும். சரிஅந்த பதிலும்தான் என்னவென்றுபார்த்துவிடுவோமே..
தமிழர்களாக ஒன்றுபடுவோம் என்பதேதமிழ் தேசியத்தின் அடிப்படை. சாதிமறந்து தமிழர்களாக ஒன்றுபடுவோம்.நாம் கட்டியமைக்கப்போகிற தமிழ்தேசியத்தில் சாதிகளே இருக்காது.தலைவர் பிரபாகரன் வழியில் தமிழ்தேசியம் அமைப்போம். நம்மைஆண்டாண்டு காலமாக வேற்றுமாநிலத்தைச் சேர்ந்தவர்களே ஆண்டுவந்திருக்கிறார்கள். தமிழனை தமிழனேஆள்வது எப்போது? அதற்காகத்தான்தமிழ் தேசியம் அமைப்போம், வாருங்கள்.
அட சரியாகத்தானே சொல்கிறார்கள்என்று திருப்தியடைந்துவிட்டீர்களா?என்னிடம் இன்னும் கொஞ்சம்கேள்விகள் இருக்கிறது.
சமஸ்கிருதமே தெய்வீக மொழி, தமிழ் நீசமொழி, அதை கோயிலுக்குள்அனுமதிக்க முடியாது என்றுபோர்க்கொடி உயர்த்துகிறபார்ப்பனர்களும் தமிழ் தேசியத்தைஆதரிப்பதன் பின்னனி என்ன?பார்ப்பனர்கள் உண்மையிலேயேதமிழர்கள் நலனில் அக்கறைகொண்டவர்களா? தமிழ் தேசியம்அமைப்பதால் பார்ப்பனர்களுக்கு என்னநன்மை?
சரி, கேள்விகளை மேலும் தொடர்வதற்குமுன் இவைகளுக்கு முதலில் விடைதேடலாம். இந்தியா பிரிட்டிஷ் ஆட்சிக்குஉட்படுவதற்கு முன் தமிழகத்தின்பெரும்பாலான பகுதிகள் மண்ணின்மைந்தர்களால்தான் ஆளப்பட்டு வந்தன.சேர, சோழ, பாண்டியர்கள் எனும் தமிழ்மன்னர்களின் ஆட்சியின் கீழ்தான்பெரும்பாலான நிலப்பரப்புகள்ஆளுகைக்கு உட்பட்டிருந்தன. ஆனால்அன்றைய தமிழ் மக்களின் நிலைதேனும் பாலும் தெவிட்டா அமுதும்நிறைந்தோடியதாக ஒன்றுமில்லை.
தமிழ் மன்னர்கள் எல்லோரும் பார்ப்பனஅடிவருடிகளாக, அடிமைகளாகத்தான்இருந்தார்கள். பார்ப்பனர்களின் நலன்காக்கிற ஆட்சியாகத்தான் மன்னராட்சிமுறை இருந்து வந்தது. இன்று மனுநீதிகாத்த சோழன் என்று கொண்டாடப்பட்டுபிஞ்சுப் பருவத்திலேயே பள்ளிபுத்தகங்கள் வழியாக மாணவர்களின்மனதில் பதிய வைக்கப்படுகிறஅரசனின் உண்மை முகம் என்னதெரியுமா? அது என்ன மனு நீதி?சாதிக்கொரு நீதி செய்து மநு இயற்றியமனு தர்ம நூலின் வழி ஆட்சி செய்தவன்என்பது பொருள்.
தீண்டதகாதவர்கள் வேத மந்திரத்தைகேட்டாலும் அவர்களின் காதில்ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும்,பார்ப்பனர்களுக்கு எந்த காரணத்தைமுன்னிட்டும் மரண தண்டனை கூடாது,பார்ப்பனர்களை வைதாலோ அந்தகுறிப்பிட்ட அங்கத்தையே வெட்டி எறியவேண்டும் என இன்னும் இன்னும் மனம்பதைபதைக்க செய்யும்அத்தியாயங்களை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.
அவன் எவ்வாறு மநுவின் வழி ஆட்சிசெய்தான் என்பதற்கு நம்எல்லோருக்கும் தெரிந்த கதையான பசுஆராய்ச்சி மணி அடித்து நீதி பெற்றதாகபுனையப்பட்ட நிகழ்வு ஒன்றேபோதுமானது. அந்த நிகழ்வுகுறிப்பிடுவது ஒன்றைத்தான், அதுஅரசனுடைய மகனேயாயினும் பசுவின்உயிர் மேலானது, பசுவை எந்தகாரணத்தை முன்னிட்டும் எவர்கொல்வதையும் அனுமதிக்க முடியாது.ஒரு பசு கன்று இறப்பிற்காகபார்ப்பனர்களின் வற்புறுத்தல்காரணமாக தன் சொந்த மகனையேதேரினடியில் வைத்து கொன்றவன் தான்மனுநீதி காத்த சோழன். பசுவின் உயிரும்மனித உயிரும் ஒன்று, இல்லையில்லைபசுவின் உயிர் மனித உயிரினும்மேம்பட்டது என்பதுதான் மனு நீதி.
இதே போன்ற பார்ப்பன அடிவருடிசேவைக்காகத்தான் தஞ்சை பெரியகோயிலை கட்டியெழுப்பிய ராஜராஜசோழனும் நினைவு கூர்ந்துபோற்றப்படுகிறான். அது என்ன?
தமிழ் மண்ணின் மைந்தர்களான சேர,சோழ, பாண்டிய அரசர்களின்ஆட்சியிலும் பார்ப்பனர்களின்ஆதிக்கமே ஓங்கியிருந்தது. இப்போதுமீண்டும் தமிழ் தேசியம் அமைப்போம்,தமிழர்களை தமிழர்களேதான் ஆளவேண்டும் என்ற முழக்கம்..
உண்மையில் தமிழ் தேசியவாதிகளின்நோக்கம் தமிழ் மண்ணை தமிழர்களேஆள்வது மட்டும் தானா? அப்படியெனில்திராவிடக் கொள்கையாளர்கள் யார்?பெரியார், அண்ணா, கலைஞர்போன்றவர்கள் தான் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள், திராவிடக்கொள்கையை பின்பற்றும்எல்லோருமேவா தமிழ் துரோகிகள்?
பார்ப்பனர்கள் தமிழ் தேசியத்தைஆதரிப்பதன் நுண்ணரசியல் அது தமிழ்,தமிழர் போர்வையில் தங்களைசுலபமாக உள்வாங்கிக்கொள்வதால்தான். அதுமட்டுமல்ல தமிழ் தேசியம்கடவுள் மறுப்பு, சாதி ஒழிப்பு போன்றஎந்தவொரு பார்ப்பனீய விரோதசெயல்பாட்டோடும் தன்னைஅடையாளப்படுத்திக் கொள்வதுகிடையாது.
திராவிட என்ற சொல்லானதுபார்ப்பனர்களுக்கு எதிர்பதத்தில்அமைவதால் அந்த வார்த்தையேஅவர்களுக்கு மிகுந்த எரிச்சலூட்டுவதாகஇருக்கிறது. பார்ப்பனீயத்திற்கு பெரும்அச்சுறுத்தலாய் பெரியார் இருந்தகாரணத்தினால்தான் இன்று அவர் ஒட்டுமொத்த தமிழர்களுக்குமே துரோகியாகஉருவகப்படுத்தப்படுகிறார்.
இன்று தமிழ் தேசியம் பேசுகிற பழநெடுமாறன், சீமான் உள்ளிட்டவர்கள்தீவிர சாதி ஆதரவாளர்கள் என்பதைவிளக்க எடுத்துக்காட்டுகளை தேடிஎடுக்க தேவையில்லை. ஒவ்வொருமுறைசேரிகள் எரிக்கப்படும் போதும் சாதிஇந்துக்களின் வெறியாட்டத்தின் போதும்மேற்கொள்கிற கள்ள மௌனமேஅவர்கள் யார் என்பதைஅடையாளப்படுத்துகிறது.
சாதியத்தை தூக்கி பிடிப்பதால்தான்தமிழ் தேசியம் பார்ப்பனர்களின்விருப்பத்திற்குரியதாக இருக்கிறது.இப்படி பார்ப்பனீயத்தை தான் தமிழ்போர்வையில் மக்கள் மீது திணிக்கிறவேலையைச் செய்கிறார்கள். இந்த தமிழ்தேசியத்தை மிக எளிதில் மக்கள்மனதில் நிறுத்துகிற உணர்ச்சிகரஅரசியலுக்கு உதவக்கூடியதாக மட்டுமேஇவர்கள் தொடர்ந்து ஈழத்தைஅரசியல்படுத்துகிறார்கள்.
ஈழம் என்பது இவர்களின் அரசியல்வியாபாரத்தின் மையப்பொருளாகஇருப்பதன் காரணமே அதுஉணர்ச்சிகளை தூண்டிவிட்டு அறிவைமழுங்கடிக்கிற வேலையை சிறப்பாகசெய்வதால் தான். பார்ப்பனர்களைஅவர்களும் தமிழர்கள் தானே என்றுஅணைத்துக்கொள்ளதெரிந்தவர்களுக்கு இங்கிருக்கிறதாழ்த்தப்பட்ட மக்களும் தமிழர்கள் தான்என்பது உறைக்காமல் போவதன் மர்மம்என்ன? அடிப்பவனையும்அடிவாங்குபவனையும் எப்படி ஒரேஅளவுகோலில் வைத்து பார்க்க முடியும்?சாதி தமிழர்களுக்கு மீதி தமிழர்கள்பல்லக்கு தூக்க வேண்டும் என்பதுதானே தமிழ் தேசியம்!
தமிழர்களாக ஒன்றுபடுங்கள் என்றுகூப்பாடு போடுவதற்கு முன் முதலில்மனிதர்களாக ஓவ்வொருவரையும்உணரச்செய்ய வைக்க வேண்டும்.சாதியை ஒழிக்க முடியாது என்று நழுவிவெறுமனே தமிழ் கோஷம் மட்டும்எழுப்புவதன் மூலம் பண்டைய தமிழ்மன்னர்களின் பார்ப்பன அடிவருடசேவை நிலைக்குதான் மக்களைஅழைத்துச் செல்ல முடியும். ஆகஉண்மையிலேயே தமிழ் தேசியம்அமைக்க விரும்புபவர்கள் அதன்பாடுபொருள்களாக தன் சகமனிதர்களையே மனிதர்களாகமதிக்காமல் இழிவுப்படுத்தி ஒடுக்கிஅழிக்கின்ற வேலைகளுக்கு மூலமாகவிளங்கும் சாதி, மதம் முதலியவற்றைஅழித்தொழித்து மக்கள் அனைவரும்சமம் என்பதே தனது பிரதானக்கொள்கை என்பதை பிரகடனப்படுத்தவேண்டும். செய்வார்களாதமிழ்தேசியவாதிகள்?
மதத்தையும் சாதியையும் மறுக்காமல்ஒருபோதும் மக்களிடையேசமத்துவத்தை கொண்டுவர முடியாது.மக்களிடையே சமத்துவம் ஏற்படுத்தாதவரையில் என்ன கூப்பாடு போட்டாலும்அவர்களை ஒன்றுபடுத்த முடியாது.
அதைவிடுத்து பிரபாகரன் வாழ்க என்றுகோஷம் போடுபவர்களுக்கு மட்டும்தான்தமிழன் பட்டம் கொடுப்போம் ,மற்றவர்களெல்லாம் தமிழ் துரோகிகள்என்று பிதற்றுவதெல்லாம் மக்கள்மதிமயங்கி கிடக்கிற நாள்வரையிலும்தான் செல்லுபடியாகும்என்பதை பார்ப்பன தமிழ்தேசியவாதிகள் உணர்ந்துகொள்வதுநல்லது.
No comments:
Post a Comment