என் இனிய தோழமைகளே,
ஏதேனும் உருப்படியாக எழுத வேண்டும் என்பது என் நீண்டகால ஆசை. நல்லதோ கெட்டதோ மனதில் பட்டதை பளிச்சென உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும். அரசியல், சமூகம், கல்வி என எந்த தளமாகினும் எதுவெல்லாம் என்னை பாதிக்கிறதோ அதையெல்லாம் உங்களோடு ஆத்மார்த்தமாக தொடர்ந்து பேச வேண்டும் என்பதே இந்த வலைப்பூ தொடங்க ஒரே காரணம். எனக்கு கோர்வையாகவோ, படிப்பவர்கள் மனம் வசியப்படும் வித்தை நிறைந்த வார்த்தை ஜாலங்களோடு எழுதும் வித்தையோ எனக்கு சுட்டு போட்டாலும் வராது. இருந்தாலென்ன, வாங்க பேசலாம்!
தோழமையுடன்,
லியோ

No comments:
Post a Comment